ஆண்டிப்பட்டியில் பொது வேட்பாளரா? - வைகோ விளக்கம்
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டியில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (சனிக்கிழமை) கூறினார்.
ஜெயலலிதா போட்டியிடுவதாகக் கூறப்படும் ஆண்டிப்பட்டி தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றிஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி வருகின்றன.
ஆனால் ஆண்டிப்பட்டியில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்து விட்டது.திமுகவும் அங்கு போட்டியிடும் என்று கருணாநிதியும் அறிவித்து விட்டார்.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளிலுமே மதிமுக தனித்துப் போட்டியிடும் என்று வைகோவும் நேற்றுஅறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து திருச்சியில் ஜனவரி 9ம் தேதி நடக்கும்மதிமுக கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று வைகோ இன்று கூறியுள்ளார்.
பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து இது வரை நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் வைகோகூறினார்.
அப்படி பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது குறித்து பின்னர்தான் நாங்கள்விளக்கமளிக்க முடியும் என்றும் வைகோ தெரிவித்தார்.
பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று ஐடியா கொடுத்த கட்சிகளே தற்போது பேசாமல் இருக்கும்போதுநாங்கள் ஏன் போட்டு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக கூட்டணியை விட்டு மதிமுக விலகிக் கொண்டிருக்கிறது என்ற கூற்றை மறுத்த வைகோ, அசைக்க முடியாததேசியக் கூட்டணியின் தலைமையான பாஜகவுடன் நல்ல உறவுதான் நிலவுகிறது என்றார்.
ஆனாலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது இக்கூட்டணியில் உள்ள சில கட்சிளிடையே சரியான உறவுஇல்லை என்பதை ஒப்புக்கொண்டார் வைகோ.
இடைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு,பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்று வைகோ பதிலளித்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications