துண்டான 5 கை விரல்கள் ஆபரேஷன் மூலம் ஒட்டவைப்பு: கோவை மருத்துவர்கள் சாதனை
கோயம்புத்தூர்:
ஒருவருடைய துண்டான 5 கை விரல்களையும் மீண்டும் ஒட்ட வைத்து கோயம்புத்தூர் மருத்துவர்கள் சாதனைபுரிந்துள்ளனர்.
கடந்த 7ம் தேதி சிவகாசியைச் சேர்ந்த 24 வாலிபர் ஒருவர் தன் அச்சகத்தில் உள்ள மெஷினில் தெரியாமல் இடதுகையை நுழைத்ததால் அவருடைய 5 விரல்களும் துண்டாகி விட்டன.
மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் துண்டான விரல்களுடன் அந்த வாலிபர் உடனடியாகச்சேர்க்கப்பட்டார். அவருக்கு முதுலுதவி செய்த டாக்டர்கள், பின்னர் விரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரைகோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அந்த வாலிபர் சேர்க்கப்பட்டார். மறுநாளே டாக்டர் ராஜாசபாபதி தலைமையில் அவருக்கு விரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அவ்வாலிபரின் கைவிரல் எலும்புகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வயர்கள் மூலம் இணைக்கப்பட்டன. சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையின்போது அவருடைய கை விரல்களின் தசை நார்களும் விரல்களும்ஒட்டப்பட்டன.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து 3 வாரங்கள் ஆன நிலையில் அந்த வாலிபர் விரைவாகத்தேறிவருகிறார்.
அடுத்த 6 முதல் 9வது மாதத்தில் அந்த வாலிபரால் பழையபடி தன்னுடைய இடது கை விரல்களைப் பயன்படுத்தமுடியும் என்று டாக்டர் ராஜா சபாபதி கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications