காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி
ஜம்மு:
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் இந்தத் திடீர்த் தாக்குதலில் அந்த வீட்டிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.பின்னர் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றிரவு ரஜவுரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி பகுதியில் உள்ள மோரா பாய் என்ற கிராமத்தில் 6வீடுகள் மற்றும் ஒரு அரசு பள்ளிக்கூடத்தின் மீது தீவிரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் வீடுகளும், பள்ளியும் முழுவதும் தீக்கிரையாகிவிட்டது.
ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதற்கிடையே எல்லையில் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,அவை வெடித்ததில் இன்றும் ஒரு ராணுவ வீரர் உடல் சிதறி உயிரிழந்தார். வேறு 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது நேற்றும் 18 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications