அமைதிப் பேச்சு: இந்தியாவிடம் தெரிவிக்க நார்வேக்கு இலங்கை வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளின் விவரங்களையும்இந்தியாவிடம் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும் என்று நார்வேக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அஸ்திவாரம் இடத் தொடங்கிய நாளிலிருந்தே இவ்விஷயத்தில் இந்தியாவின்உதவி கட்டயாம் தேவை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறிக் கொண்டிருக்கிறார்.

இதற்காக பதவியேற்ற சில நாட்களிலேயே இந்தியா சென்று, வாஜ்பாய் உள்பட பல தலைவர்களிடம் இலங்கைஇனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்திவிட்டுத் திரும்பினார் விக்கிரமசிங்கே.

பின்னர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதில் அனுபவம் கொண்ட நார்வே குழுவினரே மீண்டும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உதவ வேண்டும் என்றும் விக்கிரமசிங்கே விரும்பினார்.

இதற்காக நார்வே பிரதமர் ஜெல் மாக்னே பான்டெவிக்குடன் ஏற்கனவே தொலைபேசி மூலம் பேசிவிட்டார்விக்கிரமசிங்கே.

இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையின் அத்தனை விவரங்களையும் அண்டை நாடான இந்தியாவுக்குக்கட்டாயம் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும் என்றும் விரும்பிய விக்கிரமசிங்கே, இதுகுறித்து நார்வே பிரதமருக்குகடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை இனப் பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நார்வேயின் உதவியை நாடுவதற்கு இந்தியாஏற்கனவே ஆதரவு அளித்துவிட்டது.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம்ஆகிய இரு தரப்பிலும் போர் நிறுத்தம் கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.

பேச்சுவார்த்தை எவ்வளவு சுறுசுறுப்பாக நடக்கிறதோ அந்த அளவுக்கு போர் நிறுத்தத்தையும் நீட்டிக்கப் போவதாகவிடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இலங்கைப் பிரதமரின்அலுவலகத்திலேயே இதற்காக ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+