மாயமானார் மாஜி அதிமுக எம்.எல்.ஏ.
சென்னை:
வாக்கிங் சென்ற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் காணவில்லை என போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் எம்.கே. பாலன். மந்தைவெளி பகுதியில் வசித்து வரும் இந்த அதிமுக முன்னாள்எம்.எல்.ஏ., நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வழக்கம் போல வாக்கிங் சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதையடுத்து பாலனின் மகன் மணிமாறன் பட்டினப்பாக்கம்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், காலை 5.30 மணிக்கு வாக்கிங் சென்ற தனது தந்தை இன்னும் திரும்பி வரவில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து காணாமல் போய் விட்ட பாலனை போலீஸார் தேடி வருகின்றனர்.
தற்போது திமுகவில் பாலன்:
இவர் தற்போது திமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19991-96ம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த பாலன், கட்டப்பஞ்சாயத்துசெய்தே பல கோடி சம்பாதித்து விட்டதாக திமுகவினர் அப்போது குற்றம் சாட்டினர்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த சிறிது காலத்தில் பாலன் திமுகவில் இணைந்து விட்டார். திமுக ஆட்சியின் போதும்கட்டபஞ்சாயத்து செய்து பல கோடி சம்பாதித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
பாலன் மயிலை சாசுவத நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். அப்போது அங்கு அவர் நிறையமுறைகேடுகள் செய்துள்ளதாகவும் புகார்கள் வந்தன.
இந்நிலையில்தான் நேற்று வாக்கிங் கிளம்பி சென்ற பாலன் மாயமாகியுள்ளார்.
அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து அழைத்து சென்றதாக திமுகவினர் கூறியுள்ளனர். அவரைரகசியமான இடத்தில் வைத்து திமுக தலைவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மிரட்டிவருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் போலீசாரிடம் கேட்டபோது யாரையும் கைது செய்யவில்லை என்று கூறினர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications