எம்.எல்.ஏக்களை இழுக்க அதிமுக முயற்சி: ஜனாதிபதியிடம் புகார் செய்ய பாமக முடிவு
சென்னை:
பாமக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டால் ஜனாதிபதியிடம் புகார்செய்வோம் என்று பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது பற்றி ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:
பாமக எம்.எல்.ஏ. சிவகாமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழககவர்னர், அத்வானி, சபாநாயகர் பாலயோகி, இந்திய தேர்தல் கமிஷனர், சிபிஐ இயக்குனரிடம் மனுகொடுத்துள்ளோம்.
இருந்தாலும் அதிமுகவினர் பாமக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாமகமட்டுமல்லாமல் திமுக, காங்கிரஸ் கட்சிகளை உடைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாமக எம்.எல்.ஏ.க்களை அதிமுகவினர் தொடர்ந்து இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் எங்கள் கட்சி எம்.பி.க்கள்மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதியை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்க இருக்கிறோம்.
இது பற்றி பொதுமக்களிடம் விளக்குவதற்காக போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்.
பாமக செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறஉள்ளது. அங்கு நிர்வாகிகள் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது பற்றி முடிவு செய்வோம் என்று மணிகூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications