ரூ.250 கோடி செலவில் நவீனமயமாகிறது தமிழக காவல் துறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் காவல் துறையை ரூ.250 கோடி செலவில் நவீனமயமாக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக காவல் துறையை நவீனமயமாக்க இரண்டு ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது.
இந்த திட்டத்துக்கு ரூ.272 கோடியே 24 லட்சத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கைஅனுப்பி இருந்தது.
இந்த திட்டத்தை மத்திய மந்திரி அத்வானி தலைமையில் உள்ள உயர்மட்ட குழு ஆய்வு செய்து ரூ.244 கோடியே 84லட்சம் செலவில் அமல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.
2001 முதல் 2003ம் ஆண்டு வரை உள்ள இந்த திட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ரூ.136 கோடியே20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications