கண்ணகி சிலையை மீண்டும் நிறுவ முயன்ற 64 தமிழறிஞர்கள் கைது
சென்னை:
கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவ முயன்ற தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் 64 பேரை போலீசார்கைது செய்தனர்.
கடந்த 33 வருடங்களாக சென்னை கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை வாஸ்து சாஸ்திரத்தை சொல்லி தமிழகஅரசு அகற்றியதை பல கட்சிகளும் கண்டனம் எழுப்பி உள்ளன.
அந்த சிலையை அதே இடத்தில் நிறுவ எதிர்க்கட்சிகள், தமிழறிஞர்கள் உட்பட் பலரும் போராட்டம் நடத்திவருகின்றனர். கண்ணகி சிலையை வேறு இடத்தில் வைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழர் தேசிய பொதுவுடமைக் கட்சியின் பண்பாட்டு கலை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்மணியரசன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) 64 பேர் அண்ணாசதுக்கத்தில் இருந்து கண்ணகி சிலை இருந்தஇடத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
இவர்கள் கண்ணகி சிலை இருந்த இடத்தில் மூன்று அடி உயரமுள்ள பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்டகண்ணகி சிலையை வைக்க முயன்றனர். ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.
இதற்கு ஒப்புக்கொள்ளாத அவர்கள் 64 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்த கண்ணகிசிலையையும் பறிமுதல் செய்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications