எந்த தியாகத்திற்கும் தயாராக இருங்கள்: வாஜ்பாய்
டெல்லி:
தீவிரவாதத்திற்கு எதிராக நாம் நீண்ட போர் புரிய வேண்டியிருக்கும், அதனால் ஒவ்வொரு இந்தியனும் எந்ததியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி வாஜ்பாய்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு பல சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் குஜராத்மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பமும், ஆண்டின் நிறைவில் நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலும்குறிப்பிடத்தக்கவை.
நாம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் முலம் நம் முன் எதிர்வரும் எல்லாவிதமான சவால்களையும் இந்த புதியவருடத்தில் சந்திப்போம்.
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அங்கு உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகளை பயன்படுத்திபயங்கரவாதத்தையும், மத தீவிரவாதத்தையும் கருவிகளாக கொண்டு நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கொண்டுவர முயல்கின்றனர்.
இதனால் போர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியா போரை விரும்பவில்லை. எப்படிப்பட்டசந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள நாம் ஒவ்வொருவரும் தயராக இருக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் நீண்ட நெடியதாக இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும்உணர வேண்டும். ராணுவ வீரர்களை போல் பல தியாகங்களை செய்ய நாட்டு மக்கள் முன் வர வேண்டும்.
பயங்கரவாதத்தை நாம் வெற்றி கொள்வோம். இது ஒவ்வொரு இந்தியனின் புது வருடஉறுதி மொழியாக இருக்கவேண்டும் என்று வாஜ்பாய் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications