மதுரை சிறையிலிருந்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்: ஒருவன் பிடிபட்டான்
மதுரை:
மதுரை சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகளில் ஒருவனை வத்தலகுண்டு அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.
கடந்த டிசம்பர் 1ம் தேதி மதுரை மத்திய சிறையிலிருந்து பீட்டர் (30), மாரியப்பன் (35) இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பீட்டர் என்பவன் வத்தலகுண்டுவில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் தன் தாயாருக்காக காத்திருந்த அவனை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பிறகு மதுரைக்கு அவன் கொண்டு வரப்பட்டு கரிமேடு போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்துவருகின்றனர். அவன் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தப்பி ஓடிய மற்றொரு கைதியும் விரைவில்பிடிபடுவான் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கைதான கொள்ளையன் தப்பி ஓட்டம்:
மதுரை வில்லாபுரம் பழனிமுத்து நகரை சேர்ந்த தனலெட்சுமி என்பவரிடமிருந்து ஒருவன் 6 பவுன் தங்கசங்கிலியைபறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டான்.
இது சம்பந்தமாக வில்லாபுரம் அவுசிங் போர்டு காலனியை சேரந்த சன்னாசியை (17) கடந்த மாதம் 15ம் தேதிபோலீசார் கைது செய்தனர்.
போலீசார் சம்பவத்தன்று மதுரை ரிசர்வ் லைன் காலனியில் உள்ள நீதிபிதியின் வீட்டுக்கு கைவிலங்குடன் போலீசார்அழைத்துச் சென்றனர்
அப்போது சன்னாசியின் கைவிலங்கை கழட்டும்போது அவன் நீதிபதியின் காம்பவுண்டு சுவரை தாண்டி தப்பி ஓடிவிட்டான். அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications