Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடைத் தேர்தல்: 6ம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி வரும் 6ம் தேதி கூடவிருக்கும் செயற்குழுவில் இறுதி முடிவெடுக்கப்படும்என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) கூறினார்.

வரவிருக்கும் இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலுமே திமுக போட்டியிடுமா அல்லது ஏதாவது ஒரு தொகுதிகூட்டணிக்கு விட்டுக் கொடுக்கப்படுமா என்பது குறித்தும் திமுக செயற்குழுவே முடிவு செய்யும் என்றும்கருணாநிதி கூறினார்.

ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி கேட்டபோது, தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தக்கேள்வியே தேவையில்லாதது என்று பதிலளித்தார் கருணாநிதி.

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழை வளர்க்க முயற்சியே எடுக்கப்படவில்லை என்று தமிழக அமைச்சர் தம்பிதுரைஇன்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த கருணாநிதி, நாங்கள் எங்கள் ஆட்சிக் காலத்தில் அறிவியல் பூர்வமாகத்தமிழை வளர்த்தோம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன என்றார்.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் தற்போது திமுகவில் இருப்பவருமான எம்.கே. பாலன் காணாமல் போனதிலும்,பாமக எம்.எல்.ஏவான சிவகாமி கடந்த வாரம் காணாமல் போனதிலும் போலீசார் நடந்து கொண்ட முறைசரியில்லை. இந்த இரு சம்பவங்களிலும் போலீசாரின் நடவடிக்கைகள் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்றும்கருணாநிதி கூறினார்.

நாட்டின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+