திருச்சியில் கருணாநிதியை இழிவுபடுத்தி போஸ்டர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

கண்ணகி சிலை அகற்றப்பட்டதை அரசியலாக்கும் கருணாநிதியைக் கண்டிக்கும் வகையில் அவரது பிறப்பைஇழிவுபடுத்தி திருச்சியில் சரித்திரம் அறிந்த தமிழ் தனையர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கண்ணகி சிலையை சென்னை கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டதை கண்டித்து கருணாநிதி உட்பட பலகட்சித்தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கண்ணகிசிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ பல கட்சிகளும், தமிழ் அறிஞர்களும் சேர்ந்து போராட்டம்நடத்தப் போவதாகவும் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் "அகற்றப்பட்ட கண்ணகி சிலை குறித்து பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை. கண்ணகியையும்,கோவலனையும் பிரித்த மாதவி குலத்தில் பிறந்தவர்கள் கண்ணகி பற்றி பேசுவதா?" என்று திருச்சி முழுவதும்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் திருச்சி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோட்டீஸில் இடம் பெற்றுள்ள வாசகம் கருணாநிதியின் பிறப்பை இழிவு படுத்துவதாக இருக்கிறது என்றுதிமுகவினர் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டருக்கு எதிராக நோட்டீஸ் தயாரிக்கும்பணியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இப்படி ஒரு அமைப்பேஇல்லாத போது யார் இவ்வாறு நோட்டீஸ் அச்சடித்து அனுப்பியுள்ளனர் என்று புரியாமல் போலீசார் குழம்பிஉள்ளனர்.

இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+