For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாக். தயார்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

சார்க் அமைப்பின் தீவிரவாதிகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேவையான ஆதாரங்களை எங்களிடம் இந்தியாகொடுத்தால் 20 தீவிரவாதிகளையும் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான்கூறியுள்ளது.

ஆரம்பத்தில் தீவிரவாதிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பேயில்லை என திமிருடன் பேசிக் கொண்டிருந்தபாகிஸ்தானை இந்தியாவின் படை குவிப்பு பெருமளவில் அச்சுருத்தியுள்ளது.

இதையடுத்து போருக்குத் தயார், அடிதடிக்குத் தயார் என ஒரு பக்கம் வீர வசனங்களைப் பேசினாலும், மறு பக்கம்இறங்கி வர ஆரம்பித்திருக்கிறது பாகிஸ்தான்.

மசூத் அஸார் உள்ளிட்ட ஜெய்ஷ்-ஏ-முகம்மத், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புகளைச் சேர்ந்த 150 தீவிரவாதிகளைக்கைது செய்து உள்ளே தள்ளியுள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலையடுத்து விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதிகளின் தலைவனும்ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவனுமான மசூத் அஸார், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவன்முகம்மத் சயீத், மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டா ஷகீல்,ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல்-முஜாகிதீன், காலிஸ்தான் படை, ஹர்கத்-உல்-ஜிகாத்-ஏ-இஸ்லாமி ஆகியஅமைப்புகளின் தலைவர்கள் உள்பட 20 தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாகோரியுள்ளது.

இவர்களை ஒப்படைத்தால் தான் எல்லையில் பதற்றத்தைப் போக்கும் நடவடிக்கையை இந்தியா எடுக்கும் எனவும்மத்திய அரசு கூறிவிட்டது. இல்லாவிட்டால் பாகிஸ்தானைத் தாக்க தயங்க மாட்டோம் என்றும் அமெரிக்காமூலமாக பாகிஸ்தானுக்கு தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது.

முதலில் இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது எனக் கூறிய பாகிஸ்தான் இப்போது ஒப்படைக்கத்தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆனால், சர்வதேச சட்டப்படி இந்தத் தீவிரவாதிகள் செய்த குற்றங்களை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களையும்கொடுத்தால் தான் ஒப்படைப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இது பாகிஸ்தானின் நிலைப்பட்டால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றமாகும்.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று நோபாளத் தலைநகர் காத்மாண்டு வந்து சேர்ந்த பாகிஸ்தான்வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் நிருபர்களிடம் கூறுகையில்,

இவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து யோசிக்கத் தயார். ஆனால், சார்க் அமைப்பின் தீவிரவாதிகளைஒப்படைக்கும் சட்ட திட்டப்படி இந்தியா நடந்து கொள்ள வேண்டும். இந்தத் தீவிரவாதிகள் மீது இந்தியநீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்கு விவரங்களையும் தர வேண்டும்.

மசூத் அஸார் காஷ்மீர் சிறையில் 5 வருடம் இருந்தார். ஆனால், அவர் மீது இந்தியா நீதிமன்ற நடவடிக்கையேஎடுக்கவில்லை. ஏன்?. மேலும் அவரை இந்தியா தானாகத்தான் விடுவித்தது. (இந்திய விமானத்தை பாகிஸ்தான்ஆதரவுடன் தீவிரவாதிகள் கடத்தியபோது பயணிகளின் உயிரைக் கருதி இவனை இந்தியா விடுவித்தது என்பதுநினைவுகூறத்தக்கது.). இருந்தாலும் இப்போது ஆதாரங்களைத் தந்தால் இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தயாராக இருக்கிறோம்.

தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது ஒரு சட்டப்படியான நடவடிக்கை. இதில் அரசியலே வரக் கூடாதுஎன்றார்.

இந்திய-அமெரிக்க நெருக்குதலால் இந்தத் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட பாகிஸ்தான்தயாராகிவிட்டதைத் தான் அப்துல் சத்தாரின் பேச்சு காட்டுகிறது.

ஐக்கிய ஜிகாத் கடும் எதிர்ப்பு:

தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என பாகிஸ்தானின் ஐக்கிய ஜிகாத் கவுன்சில் கூறியுள்ளது.

பல்வேறு தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் இந்த ஜிகாத் கவுன்சில் தான் தீவிரவாதிகளுக்கு முழுஆதரவு தந்து வருகிறது. பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயுடன் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு பயிற்சிஅளிப்பது இந்த ஜிகாத் கவுன்சில் தான். மத போதனைகள் அளிக்கிறோம் என்ற பெயரில் இந்த அமைப்புதீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது.

ஒசாமா பின் லேடனைக் கூட இந்தக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தான் பாகிஸ்தானுக்குள் மறைத்துவைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த அமைப்பின் தலைவனும் ஹிஸ்புல்-முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டருமான சையத் சலாஹூதீன்கூறுகையில்,

இந்தியாவிடம் அந்த 20 பேரையும் ஒப்படைத்தால் அவ்வளவு தான், எல்லாம் முடிந்து போய்விடும். எங்கள்அமைப்பினரை (தீவிரவாதிகளை) பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருவது முறையானதல்ல. இதை சமாளிக்க புதியவழிமுறைகளை வகுத்து வருகிறோம். அரசின் செயல் வருத்தமளிக்கிறது.

இந்தியாவின் நெருக்குதலுக்கு பாகிஸ்தான் பணிந்து வருகிறது.

லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகம்மத் சயீத், ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவர்மெளலான மசூத் அஸார் உள்ளிட்ட ஜிகாத் (புனிதப் போராளிகள்) தலைவர்களை அரசு கைது செய்ததைகடுமையாக கணடிக்கிறோம்.

பாகிஸ்தான் அரசு பிரச்சனையில் இருப்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், அதற்காக இந்தியாவிடம்எங்கள் ஆட்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையை அரசு செய்யாது என நம்புகிறோம் என்றான்.

தீவிரவாதத்தை ஒழிக்க சார்க் மாநாட்டு தீவிரம்:

இந் நிலையில் நேபாளத்தில் கூடும் சார்க் மாநாட்டில் தீவிரவாத ஒழிப்புக்கு முக்கியத்துவம் தரவும், அடுத்த நாட்டில்தீவிரவாதத்தில் ஈடுபடும் ஆட்களை அந்த நாட்டிடம் ஒப்படைக்க வழி செய்யும் சட்டங்களை வலுப்படுத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்களை சார்க் கூட்டத்தில் கிளப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது கடுமையான நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.

கைகுலுக்கிய இந்திய-பாக் அமைச்சர்கள்:

இதற்கிடையே காத்மாண்டுவில் சார்க் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் ஆகியோர்நேரில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

எல்லையில் மிக பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X