தீவிரவாதிகளின் மீது பாக். நடவடிக்கை எடுக்காவிட்டால் போர் உறுதி: பெர்னாண்டஸ்

Subscribe to Oneindia Tamil

நியூ யார்க்:

இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத்தின் மேல் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கதவறினால், பாகிஸ்தான் மீது நிச்சயம் போர் தொடுப்போம் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான்இரு நாடுகளும் தங்களது எல்லையில் ராணுவத்தை குவித்து வருகின்றன.

இதனால் எல்லையில் இரு நாடுகளும் அடிக்கடி துப்பாக்கி சண்டை நடத்தி வருகிறது. இதனால் போர் மூளும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தானில் இருக்கும் 20 தீவிரவாதிகள் பட்டியலை கொடுத்து, அவர்களை ஒப்படைக்கக்கோரியுள்ளது. மேலும் தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் பெர்ணான்டஸ் நேற்று (புதன்கிழமை) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில்,

நாடாளுமன்றம் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத்தின் மேல் பாகிஸ்தான் நடவடிக்கைஎடுக்குமா என்று இந்தியா பொறுமையுடன் காத்திருக்கிறது.

தீவிரவாத இயக்கத்தின் மேல் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அமெரிக்கா எப்படி தீவிரவாதத்தைஎதிர்த்து போரிடுகிறதோ, அதே போல் நாங்களும் போரிடுவதை தவிர வேறு வழியில்லை.

பாகிஸ்தான் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதை இந்தியா தடுக்காது. ஆனால், அதற்கான விளைவுகளைபாகிஸ்தான் சந்திக்க வேண்டி வரும். பாகிஸ்தானின் அளவை வைத்துச் சொல்கிறேன், நாங்கள் பதிலுக்கு அணுஆயுதத் தாக்குதல் நடத்தினால் அந்த நாடே காணாமல் போய்விடும். இதனால் அணு ஆயுதத்தை அந்த நாடுபயன்படுத்தாது என்று நான் நம்புகிறேன்.

முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் மீதி பாகிஸ்தான் இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கையால், காஷ்மீரில்தீவிரவாதம் குறைய வாய்ப்பே இல்லை. பாகிஸ்தான் கண்துடைப்பில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் கேட்பதுஉண்மையான நடவடிக்கை.

பாகிஸ்தானால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் கலைக்கப்பட்டு வேறு பெயரில் அவை தலையெடுக்கும். கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் அதே தீவிரவாதிகள் மீண்டும் வேறு இயக்கத்தின் பெயரில் தீவிரவாதத்தில்ஈடுபடுவார்கள். இதற்கு பாகிஸ்தானே கூட திட்டம் போட்டுத் தரும்.

இந்தியாவுக்கு எதிரான லஷ்கர், ஜெய்ஷ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு கொடுத்து கொண்டிருக்கும்ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

அமெரிக்காவின வற்புறுத்தலால் தான் பாகிஸ்தான், லஷ்கர், ஜெய்ஷ் அமைப்பின் தலைவர்களை கைது செய்ததேஒழிய அந்த இயக்கங்களையே அழிப்பதற்காக அல்ல.

லஷ்கர், ஜெய்ஷ் தீவிரவாதிகள் அவர்களின் தலைவர்களுக்கு பேசும் வயர்லெஸ் செய்திகளை கேட்டதில் அவர்கள்இயக்கத்தின் தலைமையகம் பாகிஸ்தானிலிருந்து தான் செயல்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்து வரும் சம்பவங்களே இன்னமும் அவர்கள் தீவிரவாதத்தைக் கைவிடவில்லைஎன்பதற்கு எடுத்துக்காட்டு.

இவ்வாறு பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+