திண்டுக்கல்லில் வீட்டுக்குள் பஸ் புகுந்து ஒருவர் சாவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் பஸ் புகுந்ததால் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, ஈரோட்டிற்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்ஸைஅறந்தாங்கியை சேர்ந்த குமார் (35) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தபோது ஒரு சிறுமி ரோட்டைகடக்க முயன்றாள். அதை பார்த்த டிரைவர் அந்த சிறுமி மீது மோதாமல் இருக்க பஸ்ஸை ரோட்டின் ஓரமாகதிருப்பினார்.
இதனால் ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது பஸ் மோதி, அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்தது.இச்சம்பவத்தில் வீட்டிற்கு அருகே நின்றிருந்த கஸ்தூரி என்பவர் உடல் நசுங்கி இறந்தார்.
மேலும் வீட்டில் இருந்த கோமதி (50), பவித்ரா (6) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கண்ணதாசன் (25), கண்டக்டர்மருதமுத்து (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் திண்டுக்கல் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications