அரசியல் ஆதாயம் தேடுகிறார் கருணாநிதி: அதிமுக குற்றச்சாட்டு
சென்னை:
அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக அரசுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக மகளிர் அணிகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக மாநில மகளிர் அணியின் சார்பில் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர்களின் கூட்டம் கட்சித்தலைமையகத்தில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு மாநில மகளிர் அணித் தலைவியும், எம்.பியுமானகோகுல இந்திரா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அவைத் தலைவர் புலமைப்பித்தன், அமைச்சர் தம்பித்துரை, தலைமை நிலையச் செயலாளர்செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். 51 மாவட்ட மகளிர் அணி செயலாளர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கோகுல இந்திரா கூறியதாவது:
அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கருணாநிதியும், திமுகவினரும் செயல்பட்டுவருகிறார்கள். இதற்காக தேவையில்லாத விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி அதிமுக அரசுக்கு அவதூறுகற்பிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
திமுகவினரின் பொய்ப் பிரசாரம், குறுக்கு வழிகளையும் மீறி ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இதற்காக ஜெயலலிதாவுக்கு மகளிர் அணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அதிமுகவினர்முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications