அமைதித் தூதராய் இந்தியா வந்தார் டோனி பிளேர்
லண்டன்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த முயல்வேன் என பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்கூறினார்.
நேற்றிரவு பங்களாதேஷ் சென்ற அவர் இன்று மாலை அவர் இந்தியாவின் சாப்ட்வேர் தலைநகரான பெங்களூர்வந்தார். நாளை எலெக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் மாநாட்டில் பங்கேற்கிறார். பெங்களூரில் 2 தினங்கள் தங்கியிருக்கும் அவர்ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் செல்கிறார். இதன் பின்னர் டெல்லி செல்வார்.
டோனி பிளேரின் வருகையையொட்டி பெங்களூரில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலசாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் அவரை கர்நாடக ஆளுநர்ரமாதேவி, முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர்.
விமானத்தில் பிளேர் பேட்டி:
இந் நிலையில் லண்டனில் இருந்து விமானத்தில் கிளம்பிய அவர் உடன் வந்த நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நான் பயணம் செய்வதால் காஷ்மீர் பிரச்சனை தீரந்துவிடப் போவதில்லை. நான்என்ன பேசப் போகிறேன் என்றும் திட்டமிடவில்லை.
இரு நாடுகளும் போரைத் தவிர்த்து அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவேன். இந்தப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
இங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உலகின் அமைதியே பாதிக்கப்படும். இதே போலத் தான் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ்சும் கருதுகிறார். இந்திய-பாகிஸ்தான் படைகள் குவிப்பு தொடர்பாக இருவரும்தொலைபேசியில் பேசினோம். புஷ் பெரும் கவலை தெரிவித்தார். இரு நாடுகளையும் அமைதிப்படுத்த அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளவது என முடிவெடுத்துள்ளோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications