இடைத் தேர்தல்: இளங்கோவனுக்கு சோனியா அவசர அழைப்பு
டெல்லி:
இடைத் தேர்தல் பற்ற ஆலோசிக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு சோனியா காந்திஅவசர அழைப்பு அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்று சட்ட சபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல் நடை பெற உள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாகதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்கு காங்கிரஸ் தலைவி சேனியா காந்தி முடிவு செய்தார்.
இந்த ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு டெல்லியில் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தமிழக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள இளங்கோவன்,தங்கபாலு, அருணாசலம், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 18 பேரை சோனியா அழைத்துள்ளார்.
அதன்படி இளங்கோவன் உள்பட அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளனர்.












Click it and Unblock the Notifications