தேர்தலில் போட்டியிடுவாரா ஜெ.?
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவாரா என்பதில் குழப்பம்நிலவுகிறது.
ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கடந்த மாதம் 10ம் தேதி ஹைதராபாத் சென்றனர். அதன் பின்னர் 21ம்தேதி நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது சென்னை வந்திருந்தனர்.
பின்னர் தீர்ப்பை பெற்றுக் கொண்டதும் அன்று இரவே ஹைதராபாத் சென்று விட்டனர்.
இந்த நிலையில் தற்போது 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிப்ரவரி 21ம் தேதிநடைபெறவுள்ளது. இதுதொடர்பான அதிமுகவில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று அதிமுகதலைமை நிலையத்தில் நடைபெற உள்ளது.
எனவே அந்த சமயத்தில் சென்னையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை சென்னைதிரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சென்னை திரும்பியதும் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்கள் குறித்து அவர் அறிவிப்பார்என்று தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இருப்பினும் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. தற்போதையமுதல்வர் பன்னீர்செல்வத்தை பதவியில் நீடிக்கச் செய்து, தன் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும்விடுதலையான பிறகு பதவிக்கு வந்தால், தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அவர்நம்புகிறார்.
எனவே தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவது குறித்து குழப்பம் எழுந்துள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான சைதை துரைசாமி போட்டியிடலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. சைதாப்பேட்டை பகுதியில்
திமுகவின் முன்னால் எம்.எல்.ஏ.வான சைதை கிட்டுவுக்கு நிகரான நபர் துரைசாமி மட்டுமே.
எனவே கிட்டு போட்டியிடும் பட்சத்தில் அவரைத் தோற்கடிக்க துரைசாமிதான் சரியான நபராக இருப்பார். எனவேதுரைசாமிக்கே சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
வாணியம்பாடியைப் பொருத்தவரை அங்கு அதிமுக போட்டியிடுவதற்கு வாணியம்பாடி தொகுதியில் உள்ளஐக்கிய ஜமாத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வாணியம்பாடியில் செல்வாக்கு மிக்க அமைப்பு இது. மேலும், பல இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவுதெரிவித்துள்ளன. இருப்பினும் முஸ்லீம் வேட்பாளரையே நிறுத்த வேண்டும் என்று அவை அதிமுகவுக்குநிபந்தனை விதித்துள்ளன.
அதேசமயம், தேசிய லீக் கட்சியும் தங்களது வேட்பாளரை இங்கு நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால்ஐக்கிய ஜமாத்தின் ஆதரவு இல்லாமல் யாரும் இங்கு வெற்றி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
