தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் 40,000 வங்கி ஊழியர்கள்இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (வி.ஆர்.எஸ்.) ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி வற்புறுத்தி திணித்துவருவதை எதிர்த்து இன்று நாடு முழுவதும் 5 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்திலும் இந்த வேலை நிறுத்தத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சுமார் 40,000 வங்கி ஊழியர்கள் இன்றையவேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதிகாரிகள் மட்டும் பாங்க் பக்கம் தலைகாட்டியதால், வங்கிகள்அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
சென்னையில் பல இடங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற மாநிலங்களிலும் வங்கிப் பணிகள் பாதிப்பு:
இதற்கிடையே நாட்டின் மற்ற மாநிலங்களிலும் வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாகவங்கிப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தன.
அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு பெருவாரியான ஆதரவைக் கொடுத்ததால்தான்இந்த வேலை நிறுத்தம் பெரும் வெற்றி அடைந்துள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாரகேஸ்வர் சக்கரவர்த்தி இன்று கொல்கத்தாவில் கூறினார்.
வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதற்கு அவர் வருத்தமும் தெரிவித்தார்.
இனிமேல் ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி சம்பந்தப்பட்ட எந்த ஆவணத்தையும் கண்டுகொள்ளப் போவதில்லைஎன்றும் இன்று மாலை நடக்கவுள்ள கூட்டத்தின்போதுமுடிவெடுக்கப்படப் போவதாகவும் சக்கரவர்த்தி கூறினார்.
ரிசர்வ் வங்கியில் பணிகள் பாதிப்பில்லை:
ஆனால் ரிசர்வ் வங்கி மட்டும் இன்று ஒழுங்காகச் செயல்பட்டது.
இந்த வங்கியின் அனைத்துக் கிளைகளின் முன்பும் மற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதிலும், ரிசர்வ்வங்கிப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications