சென்னையில் நாளை மகளிர் கிரிக்கெட் போட்டி
சென்னை:
இந்திய-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழ, ஜன. 6) சென்னையில் நடக்கிறது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அது விளையாடுகிறது.
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ளகுருநானக் கல்லூரி மைதானத்தில் இப்போடி நடைபெறுகிறது.
அனைத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளும் தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
ஒருநாள் போட்டிகள் விவரம்:
முதல் போட்டி - ஜனவரி 6 (சென்னை)
2வது போட்டி - ஜனவரி 8 (ஹைதராபாத்)
3வது போட்டி - ஜனவரி 9 (ஹைதராபாத்)
4வது போட்டி - ஜனவரி 21 (மும்பை)
5வது போட்டி - ஜனவரி 24 (புனே)
இவை தவிர ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை இந்திய-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட்கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications