தலித் தலைவராகிவிடுவார் என்பதால் தேர்தலை தடுக்கும் மாற்று ஜாதியினர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டத்தில் இரு கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் தலித் வேட்பாளர்களுக்காகஒதுக்கப்பட்டதால் அங்கு ஒரு முக்கிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தலே நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர்.இதனல் கடந்த இரு முறையும் அங்கு உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படவில்லை.

இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரையில் இன்று போராட்டம் நடத்தினர்.

மதுரை அருகே உள்ள கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஆகிய கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் ரிசர்வ்சீட்களாகும். இந்தப் பதவிக்கு தலித்கள் தான் போட்டியிட முடியும். ஆனால், ஒரு தலித்தை தங்கள் பஞ்சாயத்துத்தலைவராக ஏற்க ஒரு குறிப்பிட்ட வேற்று ஜாதியினருக்கு மனமில்லை.

இதனால், அங்கு தேர்தலையே நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். கலெக்டர், போலீஸ் என எல்லோருமே இந்தஉயர் ஜாதியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை.

இதனால் இந்தப் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடும் அளவுக்குதலித் மக்களிடையே பலம் இல்லை என்பதால் அவர்களின் இந்தப் பதவிகளை அவர்களைப் போய்ச் சேராமல்மாற்று ஜாதியினர் தடுத்து வருகின்றனர்.

இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதில் பேசியவர்கள், ஜனநாயக நாடு என்றுகூறிக் கொண்டு, ஜனநாயக ரீதியில் ஒரு தேர்தலைக் கூட நடத்த முடியாத அளவுக்கு அரசுக்கு தைரியம் இல்லை.பதவிகள் தலித் மக்களுக்கா ஒதுக்கப்பட்டன என்ற ஒரே காரணத்துக்காக மேல் ஜாதியினர் என்று கூறிக் கொண்டுஒரு அடாவடிக் கும்பல் அங்கு தேர்தல் நடத்தவிடாமல் தடுப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இதில் அரசு தலையிட்டு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+