அரசு சாராயம் குடித்தவர் பலி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பல உயிர்களை பழி வாங்கியதால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசு அறிமுகம் செய்த மலிவு விலை சாராயம்குடித்த ஒருவர் இறந்தார்.

தமிழ்நாட்டில் சாராயசாவுகளை தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு மலிவு விலைச் சாராயத்தை தமிழக அரசுஜனவரி 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியது.

ரூ.15க்கு 100 மில்லி சாராயம் என்று கவர்ச்சியாக விளம்பரப்படுத்தி ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடஆரம்பித்துள்ளது தமிழக அரசு.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புளியங்குளத்தில் சாத்தப்பன் என்பவன் இந்த மலிவு விலை சாராயத்தை அரசுக்கடையில் வாங்கிக் குடித்தார். குடித்த அடுத்த நிமிடமே கடை வாசலிலேயே மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவர் போதை மயக்கத்தில் விழுந்துவிட்டதாக கருதி அவரது முகத்தில் தண்ணீர்தெளித்துள்ளனர். அப்போதும் அவர் எழுந்திரிக்காததால் அவரை கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் அதிக அளவில் குடித்ததால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் டாக்டர்கள் அவர் இறந்து விட்டார் என்று கூறினர். கள்ளச்சாராயச் சாவுகள் போல் அரசு சாராயச் சாவுகள்எத்தனை ஏற்படுமோ என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+