சும்மா கை குலுக்கினால் மட்டும் போதாது: வாஜ்பாய் பதிலடி
காத்மாண்டு:
சும்மா என்னிடம் வந்து கை குலுக்கினால் மட்டும் போதாது, இதை செயலிலும் பாகிஸ்தான் காட்ட வேண்டும் எனஅந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுக்கு சரியான பதிலடி தந்தார் பிரதமர் வாஜ்பாய்.
இந் நிலையில் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தனது பேச்சை முடித்த பின் நேரடியாக பிரதமர் வாஜ்பாயிடம்சென்ற முஷாரப் அவரிடம் கை கொடுத்தார். இந்தியாவிடம் நேசக் கரம் நீட்டுகிறேன் என்று அப்போது முஷாரப்கூறினார்.
இதையடுத்து வாஜ்பாயும் எழுந்து நின்று கை குலுக்கினார்.
ஆனால், பின்னர் பேசிய வாஜ்பாய், மேடையில் வந்து கை குலுக்கினால் மட்டும் போதாது. உண்மையிலேயேஅதை செயலிலும் காட்ட வேண்டும்.
முந்தைய காலங்களில் நான் பாகிஸ்தான் அதிபரிடம் நேசக் கரம் நீட்டியபோதெல்லாம் இந்தியாவுக்கு பாகிஸ்தான்தீங்கு தான் செய்தது.
நான் லாகூருக்கு அமைதிப் பயணமாக பஸ்சில் சென்றேன். ஆனால், இதற்குப் பரிசாக பாகிஸ்தான் எங்களுக்குஎதிராக கார்கில் ஊடுருவலை நடத்தியது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இதே காத்மாண்டு நகரில் இருந்துகடத்தியது.
பின்னர் ஆக்ரா வரச் சொல்லி முஷாரபிடம் கை குலுக்கினேன். ஆனால், இதற்குப் பரிசாக ஜம்மூ-காஷ்மீர் சட்டசபைமீதும் இப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் தீவிரவாதிகளை விட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆக, பல பேருக்கு முன்னால் வந்து வெறும் கையைக் குலுக்குவதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையானமனதுடன் வந்து கை குலுக்கியிருந்தால் அதை பாகிஸ்தான் செயலிலும் காட்ட வேண்டும்.
இவ்வாறு வாஜ்பாய் பதிலளித்துப் பேச இந்தியக் குழுவினர் கைகளைத் தட்டி ஆராவாரம் செய்தனர். பாகிஸ்தான்அதிபரும் அவரது குழுவினரும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர்.
வாஜ்பாய் மேலும் பேசுகையில், தீவிரவாதத்தை உருவாக்குவோர் அதே தீவிரவாதத்தால் தான் அழிவாகள்என்பதற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த விஷயங்கள் தான் ஒரு பாடம். இதிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான சட்டத்தை பாகிஸ்தான் போன்ற நாடுகள்நிறைவேற்றாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications