சார்க் மாநாடு நிறைவு: தீவிரவாதத்துக்கு கடும் கண்டனம்
காத்மாண்டு:
தீவிரவாதத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தோடு 11வது சார்க் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நிறைவடைந்தது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று காலை தொடங்கிய சார்க் மாநாட்டின்போது எல்லோருடைய கண்களும்இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவரையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப், காஷ்மீர் தீவிரவாதிகளை தீவிரவாதிகள்தான் என்று சொல்லவே மறுத்து விட்டார்.
அந்தத் தீவிரவாதிகள் அனைவரும் காஷ்மீருக்காகப் போராடி வரும் தியாகிகள் என்றும் அவர்கள் நடத்தி வரும்போராட்டத்துக்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகம் புரிந்துகொள்ள (?) வேண்டும் என்றும் சார்க்மாநாட்டின்போது கூறினார் முஷாரப்.
இவ்வாறு பேசியதோடு நில்லாமல், இந்தியப் பிரதமருக்கு திறந்த மனதுடன் என்னுடைய அமைதிக் கரத்தைநீட்டுகிறேன் என்று கூறி வாஜ்பாயுடன் வந்து கைகுலுக்கி பெரிய நாடகத்தையே நடத்தினார் முஷாரப்.
சும்மா கைகுலுக்கினால் மட்டும் போதாது. செயலிலும் பாகிஸ்தான் காட்ட வேண்டும் என்று அந்நாட்டுக்குவாஜ்பாய் தக்க பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை சார்க் மாநாடு நிறைவடைந்தது. அமைதியான முறையில் தீவிரவாதத்தை எதிர்த்து சார்க்உறுப்பு நாடுகள் போராட வேண்டும் என்று மாநாட்டின் நிறைவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத ரீதியிலான தீவிரவாதம் வளர்வதைத் தடுக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் தீர்மானம் ஒன்றுநிறைவேறியது.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1373வது தீர்மானத்தின்படி தீவிரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவோமறைமுகமாகவோ எந்த நாடும் உதவக் கூடாது என்றும் இந்த 11வது சார்க் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானில் 12வது சார்க் மாநாடு
இதற்கிடையே அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெறும் என்று இன்றைய நிறைவு விழாவின்போதுமுஷாரப் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு (2003) இம்மாநாடு நடைபெறும் என்றும் இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்முஷாரப் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications