2வது முறை கைகுலுக்கிய வாஜ்பாய்-முஷாரப்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு:
இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் சார்க் மாநாட்டில் 2வதுமுறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைகுலுக்கிக் கொண்டனர்.
அப்போது மாநாட்டு மேடையில் 7 தலைவர்களும் ஒன்றாகக் கூடினர்.
அந்தச் சமயத்தில் வாஜ்பாயும் முஷாரப்பும் மீண்டும் சந்திக்க நேரிட்டது. ஒருவரையொருவர் நேரடியாகப் பார்த்துகைகுலுக்கிக் கொண்டனர்.
இந்தியாவிடம் அமைதிக் கரத்தை நீட்டுகிறோம் என்று கூறி முஷாரப் நேற்று வாஜ்பாயின் கைகளைக் குலுக்கினார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று 2வது முறையாக மீண்டும் கைகுலுக்கிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications