இரட்டை வேடம் போடுகிறது பாகிஸ்தான்: ஜஸ்வந்த் சிங் ஆவேசம்
டெல்லி:
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் ஆவேசத்துடன் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்வோம் என்று பாகிஸ்தான் இதுவரை கூறவேயில்லை.
இவ்வாறு பாகிஸ்தான் தன்னுடைய போக்கை சிறிதும் மாற்றிக் கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை குறித்துநினைத்துப் பார்க்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.
அதேபோல் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் என்றால் ஒரு போக்கையும் அதே தீவிரவாதம் இந்தியாவில்(முக்கியமாக காஷ்மீரில்) என்றால் முற்றிலும் வேறான போக்கையும் கடைப்பிடிக்கிறது பாகிஸ்தான் என்றும்ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டினார்.
நேற்று மாலை பூஞ்ச் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது பாகிஸ்தானுடைய ஆளில்லா உளவு விமானம்தான் என்றுஜஸ்வந்த் சிங் உறுதியாகக் கூறினார்.
அத்துமீறி இந்த உளவு விமானம் இந்திய வான்வெளியில் பறந்ததற்காக பாகிஸ்தான் மீது நடவடிக்கைஎடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதே சரியான நடவடிக்கைதான் என்றார்ஜஸ்வந்த் சிங்.
வாஜ்பாய் தலைமையில் இன்று நடந்த பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
எல்லையில் படைகளைக் குவிப்பது, சார்க் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், டோனி பிளேரின் வருகைஆகியவை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications