பாக். அமைச்சரிடம் தீவிரவாதிகள் பட்டியல் தந்த மிஸ்ரா
இஸ்லாமாபாத்:
எல்லையில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் பெற வேண்டுமானால் பாகிஸ்தான் என்னென்ன செய்யவேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய கோப்புகள் பாகிஸ்தானிடம் தரப்பட்டுள்ளன.
அதில் 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.குறிப்பாக காலிஸ்தான் தீவிரவாதப் படையினர், ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தலைவர் மசூத் அஸார், தாவூத் இப்ராகிம்உள்ளிட்டவர்களை ஒப்படைத்தே ஆக வேண்டும் என அதில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீவிரவாதிகளின பட்டியலை வாங்கிக் கொண்ட பாகிஸ்தான் அமைச்சர், பட்டியலில் உள்ள தீவிரவாதிகளில்இந்தியாவைச் சேர்ந்த தாவூத், காலிஸ்தான் தீவிரவாதிகள் போன்றவர்களை இந்தியாவிடமே ஒப்படைத்துவிடுவதுகுறித்து யோசிப்பதாகக் கூறியுள்ளார்.
ஆனால், மசூத் அஸார் போன்ற பாகிஸ்தானியர்களை ஒப்படைக்க மாட்டோம் எனவும் அப்போது அவர்கூறியதாகத் தெரிகிறது. அதே போல மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம், டைகர் மேமன்ஆகியோரை ஒப்படைப்பதும் சாத்தியமில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதை இந்தியா ஏற்காது என பிரிஜேஷ் மிஸ்ராவும் அவரிடம் பதில் கூறிவிட்டார்.
சீக்கிய தீவிரவாதிகள்:
பட்டியலில் உள்ள முக்கிய சீக்கிய தீவிரவாதிகளில் முதலிடத்தில் இருப்பவன் வாத்வா சிங். இவன் 1981ம் ஆண்டில்இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்குக் கடத்திய பப்பர் கல்சா தீவாரவாதப் படையின் தலைவன் ஆவான். பஞ்சாப்முதல்வராக இருந்த பியாந்த் சிங்கைக் கொல்லத் திட்டமிட்டவனும் இவன் தான். மேலும் பல தீவிரவாதசெயல்களை இந்தியாவில் செய்துள்ளான்.
அடுத்ததாக பரம்ஜித் சிங் என்பவன் பெயர் இடம் பெற்றுள்ளது. இவன் காலிஸ்தான் கமாண்டோ படையின்தலைவன். இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைவர் ஜெனரல் வைத்யாவைக் கொன்றவன் இவன். லூதியானாவில்வங்கியைக் கொள்ளை அடித்திருக்கிறான்.
அடுத்தவன் கஜிந்தர் சிங். இவனும் இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்குக் கடத்தியதில் தொடர்புடையவன்.
மூன்றாவது நபர் லக்பீர்சிங் ரோத். இவன் பிந்தரன்வாலேயின் உறவினன். சர்வதேச சீக்கிய இளைஞர்கூட்டமைப்பை நிறுவியவன். 4வது நபர் ரஞ்சித் சிங். இவன் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் தலைவன்.இவர்கள் இன்னும் பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தூண்டி வருபவர்கள்.
தாவூத் கும்பல்:
இவர்கள் தவிர மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய நபரான தாவூத் இப்ராகிம் கராச்சியில் தான் பாகிஸ்தான் ராணுவமையக் கட்டடத்தில் வசித்து வருகிறான்.
இவனுடன் சேர்ந்து குண்டுவெடிப்பை நடத்திய டைகர் மேமன், இவனது தம்பி அயூப் மேமன், சோட்டா ஷகீல்,இஜாஸ் பதான் ஆகியோரையும் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
மசூத் அஸார்:
விமானக் கடத்தலால் காஷ்மீர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தலைவன் மெளலானாமசூத் அஸார் இப்போது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் பெயர் அந்தப் பட்டியலில் மிகமுக்கியமான குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications