இந்தியாவுக்கு ஆதரவு கோரி 40 எம்.பிக்கள் வெளிநாடு பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை விளக்கவும் அதற்கு ஆதரவு அளிக்கவும் கோரி 40 எம்.பிக்கள்பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்த எம்.பிக்கள் 10 குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒவ்வொரு குழுவிலும் 4 எம்.பிக்கள் இருப்பார்கள்.

முன்னாள் நிதி அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங், கரண் சிங், லோக்சபா துணை சபாநாயகர் பி.எம். சயீத்,ராஜ்யசபா துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, சிக்கந்தர் பகத், பேராசிரியர் விஜய் குமார் மல்ஹோத்ரா,மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் குழுத் தலைவர்களில் முக்கியமானவர்கள்.

இவர்களில் யாரும் மத்திய அமைச்சர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்தக்குழுக்களில் அதிகம் இருப்பதால், இதில் அரசியல் சாயம் பூச வாய்ப்பில்லை. தீவிரவாதத்தை அரசியல்வேறுபாடில்லாமல் அனைவரும் எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்கா தவிர ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரீசியஸ்,தென் ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கும் எம்.பிக்கள் செல்லவுள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இவர்களில் ஒரு பிரிவினர்தான் உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையில் அமெரிக்கா சென்றுள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல்லை இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளார்அத்வானி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+