இந்தியாவில் புலிகளை அனுமதிக்க வாழப்பாடியும் எதிர்ப்பு
சென்னை:
இந்தியாவில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான நார்வே நாட்டு தூதுக்குழு நடத்தும் பேச்சவார்த்தையை, இந்தியாவில் நடத்த மத்தியஅரசு உதவ வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் வாழப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பந்தப்பட்ட கொலை வழக்கில், விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரன் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு இந்திய தடை விதித்துள்ளது. எனவே விடுதலைப்புலிகளைபேச்சுவார்த்தைக்கு அனுமதித்தால் அவர்கள் திரும்பவும் இந்தியாவில் காலூன்றி விடுவார்கள்.
அதனால் மத்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்களைபேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
புதுவை காங்கிரசும் எதிர்ப்பு:
இந்நிலையில் இந்தியாவில் வைத்து விடுதலைப் புலிகளை அனுமதிக்கக் கூடாது என்று பாண்டிச்சேரி காங்கிரசும்கூறியுள்ளது.
சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அனுமதித்தால், மீண்டும் விடுதலைப் புலிகள் தமிழகத்தில்ஊடுருவ அவர்கள் இடம் கொடுத்தது போல் ஆகிவிடும் என்றார் பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் வி.நாராயணசாமி.
மேலும் இந்தியாவில் வைத்து இந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாதுஎன்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications