காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாது: ஜஸ்வந்த்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்த பாகிஸ்தான் முதலில் முன்வர வேண்டும் என்று வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளார்.
ஆனால் "காஷ்மீர் சுதந்தரப் போர்" என்ற போர்வையில் அம்மானிலத்தை இந்தியாவிடமிருந்து பிரித்து விடலாம்என்று மட்டும் பாகிஸ்தான் நினைத்துவிடக் கூடாது. அப்படிச் செய்யவும் அவர்களால் முடியாது என்றார் ஜஸ்வந்த்சிங்.
இந்திய-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறைஅமைச்சர் காலின் பாவெல் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
இதுகுறித்து ஜஸ்வந்த் சிங் கூறும்போது, இதற்காக மட்டும் பாவெல் வருகிறார் என்று கூறிவிட முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications