பொங்கல் லோனும் இல்லை: அரசு ஊழியர்கள் கவலை
சென்னை:
பாங்க் மூலம் பொங்கலுக்கு முன் பணம் வழங்கப்படும் திட்டத்தில் குழப்பம் நிலவியதை அடுத்து அரசு ஊழியர்கள்அதிருப்தியடைந்துள்ளனர்.
கஜானா காலியாகி உள்ளது என்று கூறி, அரசு ஊழியர்களின் தீபாவளி போனஸ் மற்றும் பொங்கல் அட்வான்சில்கை வைத்த தமிழக அரசு, அதிரடியாக விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளையும் அறிவித்தது.
போனஸ், அட்வான்சுக்குப் பதிலாக வங்கிகள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 கடன் வழங்க ஏற்பாடுசெய்வதாக அரசு கூறியிருந்தது.
அரசு ஊழியர்கள் நேரடியாக அந்த வங்கிகளுக்குச் சென்று படிவத்தை நிரப்பி கடன் தொகையை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ படிவம் இன்னும்ரெடியாகவில்லை.
எத்தனை பேருக்கு கடன் வழங்கலாம் என்று எங்கள் தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்தால் தான் படிவத்தை தரமுடியும் என்று வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இந்நிலையில் பொங்கலும் (திங்கள்கிழமை) வந்து விட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள்தான் வேலை நாள்.இன்று வரை படிவம் வரவில்லை என்று வங்கிகள் கூறியுள்ளன.
போனஸ் தொகையைப் பறிகொடுத்து, அட்வான்சும் கிடைக்காத அரசு ஊழியர்கள், கடனாவது கிடைக்கும் என்றுஎதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்தக் கடனும் கிடைக்காததால் கவலையடைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு மேல் கடும்அதிருப்தியிலும் உள்ளனர் அரசு ஊழியர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications