தமிழகத்தில் பேச்சு நடத்த புலிகளே விரும்ப மாட்டார்கள்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தங்கி பேச்சு நடத்த விரும்ப மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.

தமிழகத்தில் தங்கி இலங்கையுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அனுமதிக்குமாறு விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை எதிர்த்தும், ஆதரித்தும் பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. விடுதலைப் புலிகள் பேச்சு நடத்தஇந்தியாவின் எந்த பகுதியிலும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசும் பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம்அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ராமதாஸ் நிருபர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது:

விடுதலைப் புலிகள் மீது தமிழக மக்கள் உணர்விழந்து காணப்படுகிறார்கள். அதனால் விடுதலைப் புலிகளேதமிழகத்தில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பமாட்டார்கள். அதற்கு அவசியமும் இல்லை.

விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் பாலசிங்கத்துக்கு இப்போது தான் கிட்னி மாற்று சிகிச்சை செய்துகொண்டார். சென்னையில் மருத்துவ வசதி இருப்பதால் இங்கேயே பேச்சு நடத்தலாம் என்று கூறியிருப்பார்.

இலங்கையில் தமிழர்களை 50 ஆண்டுகளாக இரண்டாம் தர குடி மக்களைப் போல் இலங்கை அரசு நினைத்ததால்தான் அவர்கள் தமிழர்களுக்கென்று நாடு வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கென்று அங்கு ஒரு நாடு ஏற்பட்டால் தான் இலங்கையில் அமைதி ஏற்படும்.

இடைத் தேர்தலைப் பொறுத்த வரை ஆண்டிப்பட்டியில் நேர்மையாக தேர்தல் நடந்தால் ஜெயலலிதா தோல்வியைத்தான் தழுவார் என்று ராமதாஸ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+