மேட்டூரில் வேன்-பைக் மோதல்: 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அதிரடிப்படை கேம்ப் அலுவலகம் முன்பு வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் 3பேர் பலியாகினர்.

மேட்டூரில் மொசைக் காண்ட்ராக்ட் தொழில் செய்யும், நகராட்சி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தங்கமணியின்மகன் தங்கதுரை (19). இவர் ஈரோடு ஆர்ட்ஸ் காலேஜில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மொசைக் கம்பெனியில் வேலை செய்யும் பருத்திக்காடு ராஜாவை (24)மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மாதையன் குட்டையில் இருந்து பஸ் ஸ்டாண்டு நோக்கிச் சென்றார்.

அப்போது பெங்களூரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக 29 பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்துக் கொண்டிருந்தது.

மேட்டூர்-பவானி ரோட்டில் அதிரடிப்படை கேம்ப் அலுவலகம் முன்பு சென்று கொண்டிருக்கும்போது வேனும்,மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதின. இதையடுத்து வேன் கவிழ்ந்தது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கதுரை, பருத்திக்காட்டைச் சேர்ந்த ராஜா, வேனில் வந்தபெங்களூரை சேர்ந்த திம்மம்மாள் (53) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சிவக்குமார் (22), நாகேஸ்வரன் (24), சகாநந்தா (30), மற்றும் ரஸ்மி என்ற 4வயது பெண் குழந்தை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+