ரயில் நிலையங்களில் அதிரடிப் படை பாதுகாப்பு
சென்னை:
இந்திய எல்லையில் நிலவும் பதட்டத்தினால், ரயில் நிலையங்களில் அதிரடிப்படைப் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் தென்னக ரயில்வே பொதுமேலாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், ரயில் நிலையங்களில் அதிரடிப்படைப் பாதுகாப்பு போடுவது குறித்துகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டு அதிரடிப்படையாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இதில் இடம் பெறுவர்.
அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி கொடுக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவர்.அசம்பாவித சம்பவம் நடந்தால் அதிரடிப்படை உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.
மேலும் தீவிரவாதிகளை கண்காணிக்கும் ரயில்வே சிறப்பு ரகசிய படை அமைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. தற்போது, எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆறு ரயில்வே போலீசார் செல்கின்றனர்.
இனி இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. விரைவில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications