பெண் தர மறுத்த தம்பதி சுட்டுக் கொலை: ராணுவ வீரர் வெறிச் செயல்
தேனி:
தேனி அருகே தனக்குப் பெண் தர மறுத்த தம்பதியரை ஒரு ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார். இச்சம்பவத்தில்மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஊட்டியில் உள்ள வெலிங்கடன் ராணுவ முகாமில் ஹவில்தாராக உள்ளார் விஜய் காண்டீபன். இவர் சொந்த ஊர்தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம்.
இதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மகளைத் தனக்கு மணம் முடிக்க கேட்டு அவர்கள் வீட்டுக்குச்சென்றார் விஜய். ஆனால் தன் பெண்ணை விஜய்க்குத் தர சீனிவாசன் மறுத்துவிட்டார்.
இதையடுத்து விஜய் தன் கையில் வைத்திருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் அந்த வீட்டில் இருந்த அனைவரையும்சரமாரியாகச் சுட்டார்.
இதில் சீனிவாசனும் அவருடைய மனைவி சந்திராவும் குண்டடி பட்டு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்இறந்தனர்.
இச்சம்பவத்தில் ஜெயசுதா மற்றும் அவரது தங்கை ஜெயப்ரியா ஆகியோருக்கு கழுத்து, காலில் குண்டடி பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டின்போது சீனிவாசனின் எதிர் வீட்டிலிருந்த பெரியசாமி, அவரது மனைவி மற்றும் தெருவில்சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஆகியோர் மீதும் குண்டுகள் பாய்ந்தன.
காயமடைந்த 5 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரதுஉடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
போலீசார் விஜய் காண்டீபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதிமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications