சொல்வதை முதலில் பாக். செய்யட்டும்: ஜஸ்வந்த் சிங்
டெல்லி:
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியதை பாகிஸ்தான் செயலில்முதலில் காண்பிக்கட்டும். அதற்குப் பிறகு அந்நாட்டுடன் பேசுவதைப் பற்றிப் பார்க்கலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வாஜ்பாய் சந்தித்து இதுகுறித்துஆலோசனை நடத்தினார்.
இந்த 2 கூட்டங்களுக்கும் பிறகு நடந்த நிருபர்கள் கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங் பேசியபோதுதான் இவ்வாறுதெரிவித்தார். பாகிஸ்தானின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதைப்பார்ப்பதற்கு இந்தியா விரும்புகிறது என்றார் ஜஸ்வந்த் சிங்.
அப்படியே பாகிஸ்தானுடன் பேசுவதாக இருந்தாலும், 1972ல் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையிலும்1999ல் ஏற்பட்ட லாகூர் பிரகடனத்தின்படியும்தான் பேச்சு நடத்த முடியும் என்றும் ஜஸ்வந்த் சிங் கறாராகக் கூறிவிட்டார்.
காஷ்மீர் பிரச்சனையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று முஷாரப் கூறியிருந்தார். ஆனால்இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தப் பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீட்டுக்கு இடமேஇல்லை என்று ஜஸ்வந்த் சிங் உறுதியாகக் கூறினார்.
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்ததற்கு வருத்தம் தெரிவித்த ஜஸ்வந்த் சிங்,அந்நாடு இதுகுறித்து விரைவில் மறுபரிசீலனை செய்யும் என்றும் கூறினார்.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும்பாகிஸ்தான் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜஸ்வந்த் சிங் கேட்டுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications