தீவிரவாதிகளை காப்பாற்ற அரசு கட்டடத்துக்கு தீ வைத்த ஐ.எஸ்.ஐ.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் குறித்த கோப்புகள் வைக்கப்பட்டிருந்த 16 மாடிக் கட்டடத்தில் திடீரென ஏற்பட்டமர்மத் தீயில் அந்தக் கட்டடமே பெருமளவு எரிந்து சாம்பலானது.
பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ஷகீத்-ஏ-மில்லத் என்ற இந்தக் கட்டத்தில் ஐ.எஸ்.ஐ. தான் தீ வைத்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்திய படை குவிப்பையடுத்து தீவிரவாதிகளை கைது செய்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப். ஆனால், அவருக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவிலேயே எதிர்ப்பு வளரஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஐ.எஸ்.ஐ. மிக பயங்கர அதிகாரம் கொண்டது. ஆட்சியாளர்களையே தூக்கிஎறிவது, குண்டு வைத்துக் கொல்வது என நச்சுக் கரத்துடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உதவியுடன்ஐ.எஸ்.ஐயின் தலைவரை முஷாரப் மாற்றினார். ஆனாலும் அந்த அமைப்பை எந்த அதிபரும் ஒதுக்கிவிட முடியாதுஎன்பதை பல முறை ஐ.எஸ்.ஐ. நிரூபித்துள்ளது.
இந்த அமைப்பு தான் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. மதரஸாக்கள் என்றபெயரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சிப் பள்ளிகள் நடத்தி வந்த இந்த அமைப்பு தான் தலிபான்களை உருவாக்கிஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது.
இப்போது இந்தியாவின் நெருக்குதலால் அமெரிக்கா அதிர்ந்துபோய் பாகிஸ்தானை அடக்க ஆரம்பித்துள்ளது.தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தலைவன் மசூத் அஸார், லஷ்கர்-ஏ-தொய்பா சயீப் ஆகியோர் வீட்டுக் காவலில் தான்உள்ளனர். இவர்கள் கைதாகவில்லை. மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர்.
ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பின் கீழ் உருவான ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் குறித்த விவரங்கள் ராணுவத்தின்பாதுகாப்புடன் 16வது மாடியில் உள்துறை அமைச்சகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தக் கட்டத்தில் நேற்றிரவு 7 மணிக்கு திடீரென தீ பிடித்தது. விறுவிறுவென பரவியஇந்தத் தீயில் 10 மாடிகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாயிவிட்டன. கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்தத் தீ எரிந்தது.
முதலில் 16வது மாடியில் தான் இந்தத் தீ பிடித்தது.
மேலும் பாகிஸ்தானில் ஆயுதங்கள் வைத்திருக்க லைசென்ஸ் வாங்கியவர்கள் குறித்த கோப்புகளும் இதில் எரிந்துபோய்விட்டன. இந்தக் கட்டத்தின் அருகில் தான் அமெரிக்க கலாச்சார மையமும், அதிபரின் அலுவலகமும்உள்ளன.
இக் கட்டத்தில் 21 அமைச்சகங்களுக்குச் சொந்தமான அலுவலகங்களும் உள்ளன. தீ பிடித்தவுடன் உள்துறைஅமைச்சர் மொய்னுதீன் அக்தர் அங்கு விரைந்து வந்தார். தீயணைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டன.
ஆனாலும் கட்டடத்தில் 10 மாடிகள் முழுமையாக எரிந்து போய்விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications