இஸ்ரேலிய ரேடார் விமானம் வாங்குவதில் இந்தியாவுக்கு புதிய சிக்கல்
வாஷிங்டன்:
பால்கன் என்ற அதி நவீன ரேடார் போர் விமானத்தை இந்தியாவுக்கு இப்போது விற்க வேண்டாம் எனஇஸ்ரேலுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையில் இந்தவிமானத்தை இந்தியாவுக்கு விற்க வேண்டாம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியாவுக்கு இந்த நவீன ரக ரேடார் விமானத்தைக் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஏற்கனவே இஸ்ரேல்கூறிவிட்டது. சமீபத்தில் இந்தியா வந்த இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிமன் பெரஸ் இந்தவிமானத்தை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால், இந்த விமானத்தை விற்பதை இப்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால், இந்த விமானத்தை இந்தியா நிச்சயம் வாங்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்கூறியுள்ளார்.
முழுக்க முழுக்க இஸ்ரேலிய தொழில்நுட்பத்திலேயே உருவாகியுள்ளது இந்த நவீன பால்கன் விமானம். கடந்தஆண்டு இந்த விமானத்தை சீனா வாங்க முயன்றபோது அதை அமெரிக்கா தடுத்துவிட்டது.
இதுபோன்ற ஒரு விமானத்தை இந்தியா ஏற்கனவே தயாரித்தது. டுபலோவ் என்ற ரஷ்ய விமானத்தின் மீதுஇதற்கான ரேடாரைப் பொறுத்தி சோதனையிட்டு வந்தது. பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிப் பிரிவான டி.ஆர்.டி.ஓ.இந்த சுழலும் ரேடாரைத் தயாரித்து சோதனை செய்து வந்தது. டாக்டர் அப்துல் கலாமின் நேரடிக் கண்காணிப்பில்இச்சோதனைகள் நடந்து வந்தன.
ஆனால், சென்னைக்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அந்த ரேடார் நொறுங்கியது.விமானத்தில் இருந்த 7 வீரர்களும் பலியாயினர். இதையடுத்து அடுத்த சோதனை விமானத் தயாரிப்பில் இந்தியாஈடுபட்டுள்ளது.
இந்த சோதனைகள் முடிவடைய காலதாமதம் ஆகும் என்பதால், இஸ்ரேலிடம் இருந்து இந்த ரக விமானத்தைவாங்க இந்தியா முடிவு செய்தது.
இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இப்போதைக்கு இந்தியாவுக்கு இந்த விமானத்தைத்தர அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால், சீனாவை விவகாரமான நாடாகக் கருத ஆரம்பித்துள்ள அமெரிக்கா, அந் நாட்டை அடக்கி வைக்கும்வகையில் இந்தியா நவீன ஆயுதங்களைக் குவிப்பதை ஆதரிக்க ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானுடனான பிரச்சனை தீர்ந்த பிறகு இந்தியாவுக்கு இந்த விமானத்தைத் தரலாம் என இஸ்ரேலிடம்கூறியுள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பில் ரீக்கர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நாங்கள் தான் அந்த விமானத்தை இந்தியாவுக்கு தருமாறு இஸ்ரேலுக்கு யோசனை கூறினோம்.ஆனால், இப்போதுள்ள நிலையில் இதைச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் அமெரிக்க அதிகாரிஇஸ்ரேல் சென்றுள்ள வழக்கமான பயணம் தான். இந்தியாவுக்கு எதிராக அவர் எதையும் செய்ய அங்குபோகவில்லை. நிச்சயம் இந்த விமானம் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications