பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா பேச்சு
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறைஅமைச்சர் காலின் பாவல் இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் வந்து சேர்ந்தார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும்-பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும். எல்லையில் இருந்து படைகளைவாபஸ் வாங்குவதால் மட்டும் இந்தப் பகுதியில் பதற்றம் தணிந்துவிடாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுநடத்துவது தான் விவகாரத்தைத் தீர்க்க ஒரே வழி என்று அமெரிக்கா கருதுகிறது.
இரு நாடுகளும் மீண்டும் விமான, ரயில், பஸ் போக்குவரத்தைத் துவக்க வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில்மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவின் சார்பில் நான் வரவில்லை. (அதை இந்தியாவும் விரும்பவில்லை).
இரு தரப்பினரையும் பேச்சு நடத்த வைக்க வேண்டும் என்பதற்காக முயற்சி மேற்கொள்வேன். ராணுவத்தினரைஎந்த நேரத்திலும் எல்லைகளில் இருந்து திரும்பி அழைத்துவிட முடியும்.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையே அரசியல், தூதரகரீதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தான் கவலை தருகிறது.காஷ்மீர் உள்பட எல்லா பிரச்சனைகளையும் இரு நாடுகளும் உடனே பேச வேண்டும். இந்தியா-பாகிஸ்தான்இடையே முக்கிய பிரச்சனைகளில் காஷ்மீரும் ஒன்று என்றார்.
இந்தியா கோபம்:
இவ்வளவு பேசிய பாவல் அதே நேரத்தில் பாகிஸ்தானின் தீவிரவாதம் குறித்து ஏதும் பேசவில்லை. இதுஇந்தியாவை எரிச்சல்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளை இந்தியாவிடம் தந்துவிட்டு, தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புவதை நிறுத்தினால் மட்டுமேபாகிஸ்தானுடன் பேசுவோம் என இந்தியா கூறி வரும் நிலையில் அமெரிக்க அமைச்சரின் இந்தப் பேச்சுகோபத்தைக் கிளப்பியுள்ளது.
18ம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ள அவர், அப்போது இந்தியாவின் கவலைகள் குறித்த தனது கருத்தைத்தெரிவிப்பார் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் இருந்து அவர் இன்று ஆப்கானிஸ்தான் செல்கிறார். பின்னர் இந்தியா வரும் அவர் பிரதமர்வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைசச்ர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானியுடன் ஆலோசனைநடத்துவார்.
இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடக்க முடிந்த அளவில் முயற்சிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தப் போகிறாராம் முஷாரப்:
இந் நிலையில் நாட்டில் தனக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் கவலையடைந்துள்ள முஷாரப் ஒரு வாரத்தில்இரண்டாவது முறையாக டிவியில் தோன்றி மக்களிடையே உரையாற்றினார். அதில், பாகிஸ்தானில் விரைவில்தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரப் போவதாகவும், அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதடைகளை நீக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications