அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் பலி
மதுரை:
மதுரையில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், காளைகளை அடக்க முயன்று படுகாயமடைந்த ஒருவர்இன்று (வியாழக்கிழமை) இறந்தார். வேறு 210 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு விழா தான். ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு தான் உலகத்தில் பிரசித்தமானது. இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க வெளிநாட்டிலிருந்தெல்லாம் சுற்றுலாபயணிகள் இந்த இடத்திற்கு வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசிப்பர்.
இந்த வருடமும் நேற்று அலங்காநல்லூரில் கோட்டை முனிசாமி திடலில் ஜல்லிக்கட்டு நடந்தது. சரியாக பகல் 1.45மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. வர்ணம் பூசப்பட்டு, கொம்புகள் சீவப்பட்ட காளைகள் ஆக்ரோஷமாகவாடிவாசல் வழியாக வெளியே வந்தன.
இந்தக் காளைகளை அடக்க சுற்றிலுமுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான இளம் "காளைகள்" பங்குகொண்டனர்.
துள்ளிக் குதித்தோடி காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 210 பேர் அந்தக் காளைகள் முட்டியதால்காயமடைந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்களில் சாமநத்தத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் வேல்முருகன் இன்று காலை இறந்தார்.காயமடைந்த மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டில் கோட்டூர், கொடிமங்கலம், பாலமேடு, அய்யூர், முடுவார்பட்டி, வெள்ளையம்பட்டி, நத்தம்,திண்டுக்கல், நிலக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்துகொண்டன.
இந்த காளைகளை பிடித்த வீரர்களுக்கு டிவி, சைக்கிள், மின்விசிறி, குத்துவிளக்கு, வேட்டி, துண்டு, கைக்கடிகாரம்,பணம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. யாரிடமும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும்பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை காண ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளில்இருந்த சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஜல்லிக்கட்டுவிளையாட்டைக் கண்டு களித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications