ஆண்டிப்பட்டி தேர்தல்: யாரையோ திருப்திப் படுத்த முயற்சி - இளங்கோவன்
சென்னை:
யாரையோ திருப்திப் படுத்துவதற்காகவே ஆண்டிப்பட்டியில் மட்டும் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் மற்ற இரு தொகுதிகளை விட அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்காளர்பட்டியலை சரிபார்க்கச் சென்ற அதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆண்டிப்பட்டி தொகுதியிலும்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தேர்தல் கமிஷனுக்கு நான் தந்தி மூலம் மனுஅனுப்பியுள்ளேன். இவ்விஷயத்தில் அரசியல் அரசியல் பின்னணி ஏதோ இருக்கிறது. யாரையோதிருப்திப்படுத்தவே இப்படி செய்துள்ளனர்.
தேர்தலை தள்ளி வைக்கக் கோரி பல்வேறு கட்சிகள் முறையிட்டுள்ளன. தேர்தல் கமிஷன் முடிவைப் பொறுத்துஎங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கொடுத்த மனுக்கள் மீது தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் முடிவுக்குப் பிறகுதான்,ஆண்டிப்பட்டி தொகுதியில் தனித்து போட்டியிடுவதா, அல்லது பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பதுகுறித்து மற்ற கட்சிகளுடன் பேசி முடிவு அறிவிக்கப்படும் என்று இளங்கோவன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications