3வது அணிக்கு ரஜினி தலைமை தாங்க காங்கிரஸ் அழைப்பு
சென்னை:
3வது அணிக்குத் தலைமை தாங்க நடிகர் ரஜினிகாந்த் தயாரென்றால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
இது குறித்து இளங்கவோன் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி அமைவதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெவித்துள்ளன.
3-வது அணிக்கு ரஜினி காந்த் தலைமையேற்க வேண்டும் என்று பத்திகையாசியர் சோ கூறியுள்ளார். அவரதுகருத்தை ஏற்று ரஜினி தலைமையேற்க முன்வந்தால் சந்தோஷத்துடன் வரவேற்பேன்.
ஆண்டிப்பட்டி தேர்தல் அணுகுமுறை கூறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேசவுள்ளேன். தேவைப்பட்டால்திமுகவுடனும் பேசுவேன்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது குறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசனுடன் பேசியுள்ளேன். கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர்களுடனும் பேசுவேன்.
ஜெயலலிதா கூறியதைப் போல் நாங்கள் ஒன்றும் தவறான பாதையில் செல்லவில்லை, யார் தவறான பாதையில்செல்கிறார்கள் என்று காலம் பதில் சொல்லும்.
காங்கிரஸின் ஆதரவோடு தான் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்கள் எங்களுக்கு எந்த சலுகையும்அளிக்கவில்லை. நாங்களும் அவர்களிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்கவில்லை.
ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுபட்டு, இப்போது தேர்தலில் நிற்கிறார் என்றால் அதற்கு நாங்கள் தான்காரணம்.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அனைத்து கட்சிகளும் ஜெயலலிதா அரசை கலைக்க வேண்டும் என்றனர்.அதற்கு சோனியாவும் சரியென்று சொல்லியிருந்தால் அப்போதே அதிமுக அரசை கலைத்திருப்பார்கள்.
ஆனால் சோனியா பெருந்தன்மையோடு விட்டு விட்டார். அதனால் தான் அதிமுக அரசு இன்னும் தமிழகத்தில்ஆட்சி செய்கிறது. ஜெயலலிதாவால் இப்போது போட்டி போடவும் முடிகிறது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதே அதிமுக அரசு பல அராஜகங்களை செய்தது. அதனால் ஆண்டிப்பட்டித்தேர்தலும் உண்மையாக நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்று இளங்கோவன் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications