சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற 150 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை:
போலீசார் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு உடனே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றுகோரி சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற 150 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் சட்டக் கல்லூரி விடுதிக்குள் புகுந்து போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக 50க்கும்மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து, மாணவர்கள் பெரும் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு நபல் கமிஷனை அமைத்த தமிழக அரசு,காயமடைந்த மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
ஆனால் இன்னும் அந்த நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர்.
சென்னை பாரிமுனையிலிருந்து கோட்டை வரை ஊர்வலம் செல்வது என்று முடிவு செய்த 150 சட்டக் கல்லூரிமாணவர்கள் ஊர்வலமாகக் கிளம்பினர்.
ஆனல் ஊர்வலம் செல்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஊர்வலமாக வந்த மாணவர்களை சட்டக்கல்லூரி அருகிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த 150 சட்டக் கல்லூரி மாணவர்களையும் கைது செய்த போலீசார், கொண்டித் தோப்பில் உள்ளசமுதாயக் கூடத்தில் சென்று வைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications