ராஜகோபாலன் தமிழகத்திற்குத் திரும்பியது ஏன்?
சென்னை:
மத்திய அரசுப் பணியிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட டிஜிபி ராஜகோபாலன், தமிழக சீருடைப் பணியாளர்தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருமைமிக்க தேசிய பாதுகாப்புப் படைத் தலைவராக இருந்து வந்த ராஜகோபாலன் தற்போது சீருடைப்பணியாளர் தேர்வாணையத் தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சொந்தக் காரணங்களுக்காக தன்னை மீண்டும் தமிழக அரசுப் பணிக்கே மாற்றுமாறு மத்திய உள்துறைஅமைச்சகத்திற்கு ராஜகோபாலன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையேற்று ராஜகோபாலன் மீண்டும்தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார்.
தமிழக பணிக்குத் திரும்பிய அவரை தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக மாநில உள்துறைநியமித்துள்ளது. இந்தப் பணியை இதுவரை கூடுதல் டிஜிபியான கோவிந்த் கூடுதல் பணியாக கவனித்து வந்தார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக டிஜிபியாக ராஜகோபாலன் இருந்தார். ஆனால் ஜெயலலிதாபதவிக்கு வந்ததும், ராஜகோபாலனை சாதாரண போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக மாற்றி விட்டு, அவரை விடசீனியரான ரவீந்திரநாத்தை டிஜிபியாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய திமுக ஆட்சியின்போது சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டிஜிபியாக இருந்த ஒரு அதிகாரிதான் ஜெயலலிதாவைக்கைது செய்தவர். அவர்தான் தற்போது அடுத்த டிஜிபியாக பதவி உயர்வு பெறுவதற்குத் தயாராக உள்ளார்.
ஆனால் அந்த அதிகாரியை டிஜிபியாக நியமிப்பதற்கு ஜெயலலிதா வட்டாரம் தயாராக இல்லை. அதனால் அவரைவிட சீனியரான ராஜகோபாலனையே மீண்டும் சென்னைக்குக் கொண்டுவர தமிழக அரசு முயற்சித்ததாகவும், அதன்விளைவாகத்தான் அவர் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கறுப்புப் பூனைப் படைத் தளபதியாக ராஜகோபாலன் இருந்தாலும், அவர் பெரும்பாலும் டெல்லியிலேயேஇருக்காமல், அடிக்கடி சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அவரை தமிழகத்திற்கேமத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications