பிப். 1ல் பாஜகவில் இணைகிறது எம்.ஜி.ஆர். அதிமுக
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுக பிப்ரவரி 1ம் தேதி பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் பாரதீய ஜனதாக் கட்சியில் முறைப்படிசேரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில்:
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சி வரும் பிப்ரவரி 1ம் தேதி முறைப்படி பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைகிறது. எங்கள்கட்சியில் அனைத்துப் பிரிவினரையும் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் முன்னிலையில்எங்கள் கட்சி பாரதீய ஜனதாவில் இணைகிறது.
அதன் பிறகு தமிழகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக நீடித்ததற்கும், ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வர முடிந்ததற்கும்நான்தான் காரணம். ஆனால் அதை ஜெயலலிதா மறந்துவிட்டார்.
நாங்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்த பிறகு, அதிமுகவுடன் பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணி வைக்க முடிவுசெய்தால், பா.ஜ.க. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
மத்திய அமைச்சர் பதவி கேட்டு நான் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை. அது பிரதமரின் உரிமை. இந்த விஷயத்தில்பிரதமரின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்று திருநாவுக்கரசு கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications