அம்பேத்கர் சிலை உடைப்பு: ஒருவர் கைது
பெரம்பலூர்:
சென்னையை அடுத்த பெரம்பலூரில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அம்பேத்கர் சிலை ஒன்றை பாமக நிறுவியிருந்தது. அந்த சிலைக்குப் பக்கத்திலேயேபாமக கொடிக் கம்பமும் இருந்தது.
வியாழக்கிழமை நள்ளிரவில் இந்த சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டன.
வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
உடனடி விசாரணையும் ஆரம்பமானது. தகவல் அறிந்த காவல் துறைக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தவிசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய அரநரை கிராமத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இவர் வாரஇதழ் ஒன்றின் நிருபராக இருந்த செல்வராஜ் கொலை வழக்கிலும் தொடர்புடையவர். இந்த சிலையின் பீடத்தில் செல்வராஜின்பெயரும் பொறிக்கப்பட்டிருந்ததால் அதைக் கண்டு ஆத்திரமடைந்து சிலையை சேதப்படுத்தியதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications