தேர்தலை நிறுத்த ஜனாதிபதிக்கு கருணாநிதி அவசரக் கடிதம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதே போல ஜனாதிபதியிடம் திமுக எம்.பிக்களும் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தனர்.
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் நெருங்க நெருங்கதிடீரென ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் முளைத்தனர். இந்த போலி வாக்காளர்களை ஆளும் அதிமுக தான்சேர்த்துள்ளதாக திமுக புகார் கூற, திமுக தான் அதைச் செய்தது என அதிமுக பதிலுக்கு சண்டை போட தேர்தல்கமிஷன் விசாரணை நடத்தியது.
திடீர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது உண்மை தான் என்று நிரூபணமானதால் வாணியம்பாடி மற்றும்சைதாப்பேட்டை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.
ஆனால், ஆண்டிப்பட்டியிலும் கிட்டத்தட்ட 18,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இருந்தாலும் அங்கு தேர்தல் நடக்கிறது.
அங்கு தேர்தலை நிறுத்த வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் அதை தேர்தல் கமிஷன்கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன்முடிவெடுத்திருப்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
போலி வாக்காளர்களை நீக்காமல் அங்கு தேர்தலை நடத்தக் கூடாது. இது தொடர்பாக திமுக எம்.பிக்கள் கொடுத்தபுகாரையும் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதில் நீங்கள் தலையிட வேண்டும் எனக் கூறியுள்ளார்கருணாநிதி.
திமுக எம்.பிக்கள் மனு:
இந் நிலையில் திமுக எம்.பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணனை நேரில் சந்துத்துஆண்டிப்பட்டியில் தேர்தலை நிறுத்தக் கோரி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆண்டிப்பட்டியில் ஆயிரக்கணக்கான உண்மையான வாக்களர்களின் பெயர்களை பட்டியலில்இருந்து நீக்கிவிட்டு அதிமுகவினரை போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், எனவே அங்குதேர்தலை நிறுத்திவிட்டு பட்டியலை தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications