கோவை அருகே பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டு நகை-பணம் கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர், அங்கிருந்தபெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர் அருகே அட்டயம்பாளையத்தில் 45 வயதாகும் ஒரு பெண் ரைஸ் மில் நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் தன் வீட்டுப் பின்புறக் கதவருகே ஏதோ சப்தம் வருவதைக் கவனித்த அந்தப்பெண், அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது திடீரென்று ஒரு கொள்ளைக் கும்பல் அந்தப் பெண்ணைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தது.அந்தக் கொள்ளையரைத் தடுப்பதற்கு அந்தப் பெண் கடுமையாகப் போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்களில் ஒருவன், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அந்தப்பெண்ணின் வயிற்றில் சுட்டுள்ளான்.
பின்னர் அந்தப் பெண்ணின் மகனையும் தாக்கிய கொள்ளையர்கள், அவ்வீட்டிலிருந்து நகைகளையும்பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பியோடி விட்டனர்.
வயிற்றில் குண்டுக் காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
அந்தக் கொள்ளையர்கள் இந்தியிலேயே பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளையர்களைப் போலீசார்வலைவீசித் தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications