ரயில்கள், ரயில் நிலையங்களில் "தம்"மடிக்கத் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் புகை பிடிப்பதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.

பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் எதிரொலியாக சென்னை, கோயம்புத்தூரில் 1,000க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்து,அபராதம் வசூலித்தனர்.

இந்நிலையில் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் புகை பிடிக்கத் தடை விதித்து இந்திய ரயில்வேஉத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தடையை மீறுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்வே அலுவலகக் கட்டடங்கள், ரயில் நிலைய பிளாட்பாரங்கள் உள்ளிட்ட இடங்களிலும் புகை பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+